அபகரிப்புக்களுக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) - வாகரையில் மேற்கொள்ளப்படும் கனிய மண் அகழ்வு, இறால் பண்னை, நில அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக முற்போக்கு தமிழர் கழகம் கட்சி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (02.05.2024) இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (Viyalendiran) தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாகரையில் இருந்து கதிரவெளி பிரதேச செயலகம் வரை சுமார் மூன்று கிலோமீற்றர் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனு கையளிப்பு
இதன்போது, மண்ணகழ்வு, கனியவள அகழ்வு மற்றும் இறால் உற்பத்திக்கான நில அபகரிப்பு போன்றவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊர்வலத்தில் பொது அமைப்புக்களும் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri