கோரிக்கைக்கு செவிகொடுக்காத அரசியல்வாதிகள்! அக்கரபத்தனையில் போராட்டம்(Photos)
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உட்லெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலத்தை புனரமைத்து தருமாறு தெரிவித்து, தோட்ட மக்களால் நேற்று (14) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாலத்தை, 800க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கோரிக்கைக்கு இதுவரை செவிகொடுக்காத அரசியல்வாதிகள்..
1992 ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கு பலகைகளால் ஆன பாலத்தை பிரதேசவாசிகள் பயன்படுத்தி வந்த நிலையில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இரும்பினால் இரண்டரை அடி அகலமும் 30 அடி நீளமும் கொண்ட பாலம் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.
எனினும், கடும் மழையின் போது பாலம் வெள்ளத்தில் மூழ்குவதுடன், மழைக் காலங்களில் பாலத்தை கடக்க முடியாதவாறு பாலம் பழுதடைந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு, மலையக அரசியல்வாதிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எவரும் இதனை புனரமைத்து கொடுக்க முன்வரவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.





வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
