மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு கிராமத்தில் உள்ள அரச காணியினை மோசடியாக விற்பனை செய்தமை மற்றும் கையகப்படுத்தியமைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இன்று (20.04.2026) பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கூறுகையில், குடத்தனை வடக்கு கிராமத்தில் உள்ள அரச காணியினை மோசடியாக விற்பனை செய்தமை மற்றும் கையகப்படுத்தியமைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி மருதங்கேணி பிரதேச செயலகம் ஏனைய உயர் திணைக்களத்திடமும் நாம் முறையிட்டிருந்தோம்.
நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்
இவ்விடயம் தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகள் பிரதேச செயலகத்திற்கு பணித்திருந்தும் இது வரை எதுவித நடவடிக்கையும் எடுக்காது அலட்சியம் செய்து வருவதுடன் கடமை துஷ்பிரயோகம் செய்து ஊழலுடன் செயற்படுகின்றனர்.

எனவே இவ்விடயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி குடத்தனை வடக்கு வாழ் மக்களாகிய நாம் பிரதேச செயலகத்தின் முன்பாக பிரதேச செயலாளர் காணி உத்தியோகத்தர் கிராம சேவகர் ஆகியோருக்கு எதிராக அமைதிவழி போராட்டம் முன்னெடுத்தோம் என குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் வீடொன்றில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - தாய், மகள் உட்பட மூவர் பலி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்