மன்னாரில் மதுபான சாலை ஒன்றை இடமாற்றம் செய்யுமாறு போராட்டம்
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை உடனடியாக இடமாற்றக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (30.09.2024) காலை 9 மணி முதல் ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என பல நூற்றுக்கணக்கான மக்களின் ஒன்றுகூடலுடன் நடைபெற்றுள்ளது.
குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், ஆடை உற்பத்தி நிலையம், உட்பட பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்றது.
பிரேத பெட்டி
இந்நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிரேத பெட்டியுடன் குறித்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அரசாங்க அதிபரின் உறுதி
எனினும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் முன் வைத்துள்ளனர்.
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, மக்கள் தமது பிரச்சினைகளை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த மதுபானசாலையை பிரதேச செயலாளர் அல்லது அரசாங்க அதிபரின் உடனடியாக மூட முடியாது என்றும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஊடாகவே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து உடனடியாக மதுவரி
திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின்
கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு
நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
