போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி மக்கள்
தமது கிராமத்தில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(25.10.2026) கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட செல்வாநகர் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம்
செல்வா நகர் முத்துமாரி அம்மன் ஆலய முன்றாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம், பேரணியாக செல்வாநகர் சந்திவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் கிராமத்தின் இளைஞர்கள் தவறான வழியில் செல்வதால் கிராமத்தில் சமூக சீரழிவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், உரிய திணைக்களங்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தியே இவ்வாறு போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், போராட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மற்றும் மாவட்ட அரசாங்கதிபர், கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுக்கள் போராட்டக்காரர்கள் முன்னர் வாசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் கை கால் நல்லா தான் இருக்கு.. சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பாண்டி விளக்கம் Cineulagam