சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ளவுள்ள ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டமும், 15ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டமும், 19ஆம் திகதி தொடருந்து மறியல் போராட்டமும் நடத்தப் போவதாக மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை நேற்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகுடன், ஏழு கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளது.
மீனவ சங்க ஆலோசனைக் கூட்டம்
இந்த நடவடிக்கை காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது கூட்டத்தில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த விசைப்படகு நாட்டு படகுகளை இலங்கை கடற்படை கைது செய்து கடற்தொழிலாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் என சிறை தண்டனை விதிக்கிறது.
இலங்கை சிறையில் வாடி வரும் 24 கடற்தொழிலாளர்களையும் நல்ல நிலையில் உள்ள படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய இலங்கை கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மற்றும் பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சேதம் அடைந்த விசைப்படகுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரண நிதியில் விடுபட்ட விசைப்பலகைகளுக்கும் நாட்டுப் படகுகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
தமிழக முதல்வர் இலங்கை சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களையும், படகுகளையும் விடுவிக்க டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து கடற்தொழிலாளர்களை மீட்பதற்கு குரல் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விசைப்படகுகளும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து எதிர்வரும் ஆகஸ்ட் 13ஆம் திகதி அன்று தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும், சுதந்திர தினம் அன்று ஆகஸ்ட் 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமும், ஆகஸ்ட் 19ஆம் திகதி மாலை 3 மணியளவில் இடம் குறிப்பிடாமல் தொடருந்து மறியல் போராட்டம் நடத்துவது என ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 22 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
