நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (16) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை -கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் இன்று (16) பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற இருந்த நேரத்தில் மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமக்கு நியாயமான தீர்வு
அநுர ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு அநீதியா? அவசியம் இடமாற்றம் வேண்டும் வேலை கிடைத்தது முதல் ஓய்வு காலம் வரை இங்குதானா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பல வருட காலமாக கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கும் போது, சிலர் நகர் பகுதில் வேலை செய்ய வேணும் என்ற ரீதியில் இவ்இடமாற்றத்தினை நிறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன உட்பட அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்து தமக்கு நியாயமான தீர்வினை பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தை நடாத்துவதற்கு இடம் அளிக்குமாறும் தங்களுடைய கோரிக்கைக்கு சிறந்த தீர்வினை பெற்று தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


