திருகோணமலையில் நள்ளிரவை தாண்டியும் தொடரும் போராட்டம்!
திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்பாகவுள்ள காணியில் புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கெதிராக நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடைபெறுகின்றது.
திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளமையை எதிர்த்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நள்ளிரவை தாண்டியும் தொடரும் போராட்டம்
இந்த போராட்டத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று(13.05.2023) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர், நள்ளிரவை தாண்டியும் தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
