திலீபன் சிலை அகற்றம் விவகாரம் - நல்லூரில் தொடரும் போராட்டம்
புதிய இணைப்பு
தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் நேற்று முன்தினம் முதல் நல்லூரில் தீயாக தீபம் தொடர் போராட்டமொன்று ஆரம்பமாகி நடைபெற்றது.
குறித்த போராட்டம் இறுதி நாளாக இன்று மாலை இடம்பெற்றதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கான மனு வாசிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவகத்தில் கையளிக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - நல்லூரில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, நேற்று(01.10.2026) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போராட்டம் இன்று(02.10.2026) மாலை பேரணியாக யாழ்ப்பாணம் ஐ.நா அலுவகத்தில் சென்று மனுவொன்றும் கையளிக்கப்பட்ட பின்னர் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நல்லூரில் தியாக தீபத்தின் நினைவிடத்தில் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








