மன்னாரில் 27ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (29) 27 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை துறை கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர்.
ஒரு மாத கால அவகாசத்தில்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதி இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அருட்தந்தையர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மன்னாரில் காற்றாலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய ஒரு மாத கால அவகாசத்தில் தமக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் தீர்வு உரிய முறையில் கிடைக்காது விட்டால் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
