ஸ்பெயின் மன்னர் மீது சேற்றை வீசி கடும் எதிர்ப்பு: அதிர்வலையான சம்பவம்!
ஸ்பெயினில்(spain) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற மன்னர் பெலிப் மற்றும் ராணியார் லெதிசியா மீது சேற்றை வீசி அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது எதிர்ப்பை வெளியிட்ட மக்கள் “பதவி விலக வேண்டும்”, “மன்னரும் ராணியாரும் மட்டுமின்றி, பிரதமர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து சேற்றை வீசி கொலைகாரர்கள் எனவும் மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.
#Spaniards don't know what to do with their king and queen, AKA human-size parasites. There is a perfectly working guillotine right across the border. #Spain #Valencia pic.twitter.com/3WU2849zjv
— Alex Bukovsky (@BungeeWedgie) November 3, 2024
வெள்ள அபாய எச்சரிகை
பெருவெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வலென்சியா மாகாண பகுதியிலேயே குறித்த எதிர்ப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ள அபாய எச்சரிகையானது வெள்ளம் பெருக்கெடுத்த பிறகு வெளியிடப்பட்டமையால் குறித்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ஸ்பெயின் பிரதமர் மற்றும் வலென்சியாவின் பிராந்திய தலைவர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |