இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுப்பு
தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தமையை கண்டித்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி விசைப் படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
கடற்றொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று (18.2.2024) காலை கறுப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்து நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதுடன் நேற்று (17) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
