முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுப்பு (Photos)
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் இல்லாமையால் கடற்தொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், மண்ணெண்ணெய்யினை பெற்றுத்தரக் கோரியும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கடற்கரை சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து அங்கு மண்ணெண்ணெய்யினை பெற்றத்தர கோரி மனுவினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளார்கள்.
போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முல்லைத்தீவு சாலை தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்தொழிலாளர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
கடந்த 17 நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மண்ணெண்ணெய் இல்லாத நிலை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் காணப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்கள்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
