சுகாதர அமைச்சரே வெளியேறு! சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட பெண்கள் (Video)
கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரியும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி விலகுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (23.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நிரோஷா அதுகோரல மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினர் ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டதையடுத்து, அங்கு சற்று அமைதியின்மை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை சந்திக்கக் குறித்த தரப்பினர் முற்பட்டதையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, அமைச்சின் பிரதான நுழைவாயிலை பொலிஸார் மற்றும் அமைச்சின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூடியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
