பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடியவர் பிரபாகரனே! யாழ். பிரதான வீதியில் போராட்டம் (Photos)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி அல்ல என தெரிவித்து நபரொருவரால் யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று காலை 7.30 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நபர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடியவர் பிரபாகரன் தான் என கூறி இன்னும் பல விடயங்களை உரக்கக்கூறி குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களுக்காக நான் குரல் கொடுத்தேன். நான் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் பற்றி பேசியவன். அவர்களே என்னை தற்போது கடுமையாக விமர்சித்து, தாக்குதல் தொடுக்க முயற்சித்து வருகின்றனர். இது மோசமான அரசியல் முன்னுதாரணம். இப்படியானவற்றை செய்ய வேண்டாம். மிகவும் மோசமானது.
கனவான் அரசியல்வாதிகள் வடக்கில் இருக்கின்றனர். இப்படி செய்ய வேண்டாம் அருவருப்பு, வெட்கம். வடக்கில் உள்ள தமிழர்களுக்கும் தெற்கில் உள்ள மக்களுக்கும் ஐக்கியம் என்பது முக்கியம். 30 ஆண்டுகள் போர் செய்தோம், அதன் மூலம் எமக்கு என்ன கிடைத்தது. ஏன் அடிப்பிடிபட வேண்டும். எமது இரத்தம் ஒன்று என்றால், ஏன் நாம் இனவாதத்தில் சிக்கி, இழந்தது எத்தனை, எத்தனை உயிர்கள் நாசமாகி போனது.
எவ்வளவு சொத்துக்கள் அழிந்து போயின. அதிகமான இழப்பு தமிழர் சகோதரர்களுக்கே ஏற்பட்டது. சகோதர தமிழர்களுக்கே சொத்துக்கள் அழிந்து போயின. இனவாதம் மூலம் எமக்கு கிடைத்தது என்ன?. வடக்கில் உள்ள மக்களுக்கு சுதந்திரமாக பிறக்கவும் வாழவும், நித்திரை கொள்ளவும், நித்திரையில் எழுந்திருக்கவும் இறக்கவும் உரிமை இருக்கின்றது. இவையே மனிதர்களுக்கு தேவையானவை.
இந்த பிரச்சினைகளை ஏன் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாது. பிறக்க போகும் பிள்ளைகளும் இதனையே வழங்க போகிறோமா?. அப்படி செய்ய வேண்டாம். அன்று இரண்டு வயது குழந்தை தற்போது 22 வயதான இளைஞன். அந்த இளைஞர்களை வருமாறு அழைக்க நான் ஆசைப்படுகிறேன். இந்த சமூகத்திற்கு நான் பல கடமைகளை நிறைவேற்றியுள்ளேன். அப்படியான என்னை வடக்கில் உள்ள மக்கள் விமர்சித்தனர். உண்மையை பேசியதால், என்னை விமர்சித்தனர்.
வெட்கம். காற்சட்டை அணிந்து இந்த இடத்திற்கு வந்த அரசியல்வாதியை காற்சட்டை கழற்றி விட்டு, புடவை கட்டிக்கொள்ளுமாறு நான் கூறுகிறேன். வெட்ககேடான வேலைகளை செய்ய வேண்டாம். நாளை பிறக்க போகும் பிள்ளைகளின் கைகளில் சயனைட் குப்பிகளை கொடுக்க வேண்டாம்.
ரி.56 துப்பாக்கியை கொடுக்க வேண்டாம். வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களுக்கும் இடையில் பகையையும் குரோதத்தையும் உருவாக்கி, நாட்டில் மீண்டும் இரத்த களறியை ஏற்படுத்தும் தேவை இவர்களுக்கு இருக்கின்றது. பிறக்க போகும் குழந்தைகளுக்கு இதனை வழங்க வேண்டாம்.
அந்த மக்களுக்கு சுதந்திரத்தை கொடுங்கள், பேச்சுரிமையை கொடுங்கள். தேவேந்திர முனையில் இருந்து பருத்தித்துறைக்கும், பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனைக்கும் செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுங்கள். நாங்கள் இறந்து போவோம். மக்கள் சுதந்திரமாக வாழும் தேவை இருக்கின்றது.
அந்த பின்னணியையா இவர்கள் உருவாக்கினர். பிரபாகரன் என்பவர் எப்படி கொலைக்கார் ஆனார். எப்படி சர்வதேச பயங்கரவாதியாக மாறினார். அன்று பிரபாகரன் அழகான இளைஞன். அப்படியானவர்கள் மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்றது யார். முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது யார்?.
எதிர்காலத்தில் நான் இவற்றை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைப்பேன். உண்மையான கொலையாளிகள் யார் என்பது கூறுவேன். வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலையாளியாகவும் பயங்கரவாதியாகவும் மாற்றியது யார்?. இந்த கேள்வியே என்னிடம் உள்ளது. இதனை வெளியிடுவேன். நாளை பிறக்க போகும் குழந்தைகளும் பேசும் உரிமையை கொடுங்கள். மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமையை கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அங்கிருந்த ஒருவர் பிரபாகரனை பயங்கரவாதியாக மாற்றியது யார் என இந்த நபரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர்,
சமூகத்தில் குற்றவாளிகள் அணி ஒன்று இருக்கின்றது. யார் என்று கூற முடியுமா? பதில் நான் ஜெனிவாவில் சாட்சியங்களை முன்வைத்துள்ளேன். இதனால், அந்த கூறுவதற்கு எனக்கு தடை இருக்கின்றது. நான் எடுத்த 26 ஆயிரத்து 900 புகைப்படங்களை வழங்கியுள்ளேன்.
உண்மைகளை நான் வழங்கியுள்ளேன். பிரபாகரன் பயங்கரவாதியாக மாறியமைக்கு இலங்கை அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும் பல அணியினர் இருக்கின்றனர். தற்போதும் பிரபாகரன் ஒரு குற்றவாளி என முத்திரை குத்துகின்றனர்.
எனினும் ஏன் அவர் அப்படியான நிலைமைக்கு சென்றார் என்பதுதான் கேள்வி. வடக்கில் மேலும் நூற்றுக்கணக்கான பிரபாகரன்கள் உருவாகலாம்.
இன்று நடந்த அநீதியை போன்ற நிகழ்வுகள் காரணமாகவே அப்படியானவர்கள் உருவாக்கின்றனர். அநீதிகள் காரணமாகவே பிரபாகரன் போன்றவர்கள் உருவாகின்றனர். போரில் ஆயிரணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.







மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
