கொழும்பிற்கு படையெடுத்த பெருந்திரளானோர்! பொலிஸாருடன் கடும் வாக்குவாதம் (Video)
பொலிஸாரின் வீதித் தடைகளை மீறி அரசாங்கத்தின் அநீதியான வரிக் கொள்கைக்கு எதிராக பல தொழில் வல்லுனர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த போராட்டம் நேற்று (20.01.2023) கொழும்பில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களின் சங்கங்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் இரண்டு இடங்களில் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெருந்திரளானோர் கொழும்பிற்குள் படையெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கொழும்பு தாமரை தடாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகளில் ஏறி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வந்த போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
