பௌத்தர்களுக்கு மத்தியில் சரத் வீரசேகரவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட நபரால் குழப்பம்! கொழும்பில் சம்பவம் (Video)
கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் வைத்து நபரொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு - குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று காலை ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் பெருமளவான பௌத்த பிக்குகள், நாடளுமன்ற உறுப்பினர்களான சன்ன ஜயசுமன மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட அரசியல்வாதிகள், பௌத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் வைத்து ஆரம்பமாகியிருந்தது.
சரத் வீரசேகரவிற்கு எதிர்ப்பு
குறித்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் வைத்து நபரொருவர் சரத் வீரசேகரவிற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
“நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு தற்போது சிங்கள மக்களை ஒன்றிணைக்க வருவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri