கொழும்பில் ஒன்றுதிரண்ட பெருமளவு பௌத்தர்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிர்ப்பு (Video)
கொழும்பில் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு - குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி புத்தசாசன அமைச்சினை நோக்கி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குருந்தூர்மலை விவகாரம்
குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தான் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பௌத்தர்கள் மற்றும் பிக்குமார் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan