கொழும்பில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (Video)
வரிச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட 8 தொழிற்சங்கங்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க முன்னதாக கூறுகையில், "அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள்.
இது மற்றுமொரு சமிக்ஞையே. இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
