கடும் கோபத்தில் மக்கள்! காலிமுகத்திடலை நோக்கி விரையும் மிகப்பெரும் கூட்டம் (Video)
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.
இதில் பல்கலைக்கழ விரிவுரையாளர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட மிகப்பெரிய மக்கள் கூட்டமொன்று இணைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி விரைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக மக்கள் ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தற்போது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனை தொடர்ந்து வெளியாகிவரும் விலை அதிகரிப்புகளையடுத்து ஆவேசமடைந்து வீதிக்கு இறங்கியுள்ளனர்.
இந்த நிலையிலேயே நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த விரிவுரையாளர்கள் உட்பட பலரும் கொழும்ப காலிமுகத்திடலை நோக்கி முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




