கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம்: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி (Live)
அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் - கேம்பிரிஜ் பிரதேச பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மாற்றுவீதிகள் ஊடாக பிரதமரின் அலுவலத்திற்கு செல்ல முயற்சித்து வரும் நிலையிலேயே கேம்பிரிஜ் பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அப்பகுதியிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த வீதிமறியல் போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற தடை உத்தரவிற்கு அமைவாக தற்காலிகமாக வீதிமறியல் போராட்டத்தை கைவிடுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்த போதும் தற்போது பிலவர் எவன்யூ பகுதிக்கு சென்று பிரதமர் அலுவலத்தை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் தற்போது அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அங்கு சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை சற்றுமுன் பதிவாகியுள்ளது.
அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டுள்ளனர்.
எனினும் அப்பகுதியில் பரீட்சை நிலையமொன்று இயங்கி வரும் நிலையில் அப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்ப முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனினும் தற்போது போராட்டக்காரர்கள் வீதியை மறித்து அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்துள்ளதாக தெரியவருகிறது.











SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
