இலங்கை ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை நடைபெற்றுள்ளது.
பேரணியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் காந்தி பூங்கா வரையில் சென்றிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டம் அதிபர், ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு! அதிபர், ஆசிரியர்களின் சேவையை "அகப்படுத்தப்பட்ட சேவை"யாக அங்கீகரி! அதிபர், அசிரியர், மாணவர், பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்து! கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அமுல்படுத்தாதே! அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்து! இலவசக் கல்வியை இராணுவ மயமாக்காதே! அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க எமது சேவையை கௌரவப்படுத்து! போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்றிருந்தது.










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
