சுழற்சி முறையில் போராட்டம் ஆரம்பம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முற்றுகையிடப்படுமென எச்சரிக்கை (Video)
மட்டக்களப்பு பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி சுழற்சி முறையிலான போராட்டத்தில் குறித்துள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக இன்று (15.09.2023) காலை 9 மணி முதல் குறித்த போராட்டம் முன்னெக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விவசாய கூட்டத்தின் போது மேய்ச்சல் தரை தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து தங்களது மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று பண்ணையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், இதற்கான தீர்வு கிட்டாதபட்சத்தில் கால்நடைகளைக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இந்த விடயத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய சுழற்சி முறையிலான போராட்டத்தின் போது குறித்த இடத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரனிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - சசி










யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
