நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை
பத்தரமுல்ல - ஜயந்திபுரவில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாகவே இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டப் பேரணியானது நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் நுழைய முற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரியவை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.
மேலும், சுமார் 500 பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.











