நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் (Photos)
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்றையதினம் (18.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா, சலங்கந்தை - ஒட்டரி ஆகிய பிரிவுகளில் அமைக்கப்படும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலை வேண்டாம்
"மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம்" என கோஷங்களை எழுப்பியவாறு ஒட்டரி பகுதியில் இருந்து டிக்கோயா நகர்வரை மக்கள் பேரணியாக வந்துள்ளனர்.
ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை "மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது.
மேலும் “எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் தடையாக உள்ளன. எனவே, எமது பகுதிக்கு மதுபானசாலை வேண்டாம்." - என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.








