மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30பேருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று(10) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம்திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது வழக்கில் தொடர்புடைய அனைவரும் மன்றுக்கு சமூகமளிக்காமையினால் அடுத்த வழக்கில் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் முன்னிலையாகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் எதிராகவும் இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam