கிளிநொச்சியில் தனி நபரொருவரின் கடலட்டை பண்ணை! கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பூநகரி பிரதேசத்தில் உள்ள பாலாவி எனும் இடத்தில் தனி நபர் ஒருவர் கொடுக்கப்பட்ட இடத்திற்கு மேலதிகமான இடங்களைப் பிடித்து கடல் அட்டை பண்ணை ஒன்று அமைத்துள்ளார் என பாலாவி கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பள்ளிக்குடாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தனி நபர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட எல்லைக்கு அதிகமான இடங்களைப் பிடித்து அவர் பண்ணை நடத்தி வருகின்றார்.இதனால் தாம் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடல் அட்டை பண்ணையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், தாம் கொடுக்கப்பட்ட இடத்திலேயே பண்ணை அமைத்துள்ளதாகவும், தாம் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தம்மீதுள்ள தனிப்பட்ட பகை காரணமாகவே இவ்வாறு தம்மைத் திட்டமிட்டுப் பலி வாங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
