யாழில் சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம்
யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமான எதிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (31.07.2023) பிற்பகல் வேளை கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டமானது நாளை செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணி வரை சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு அண்மையில் இடம்பெறவுள்ளது.

வலுச் சேர்க்குமாறு கோரிக்கை
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan