சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்
யாழில் (Jaffna) சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 04 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.
மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்த விதமான அனுமதிகளும் பெறப்படாது குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விகாரையில் பௌர்ணமி தின வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு தென்பகுதியில் இருந்து பேரினவாத மக்கள் அழைத்து வரப்படுவது வழமை.
பௌர்ணமி தின வழிபாடுகள்
அந்தவகையில், ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மேலும், இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
