மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த மக்கள்
மட்டக்களப்பு - சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமத்தை அண்டிய பகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, நேற்று(19.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், போதையற்ற நாட்டை உருவாக்கு சட்டத்தரணிகளே, போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவாக நீதிமன்றில் முன்னிலையாகாதே என எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியபடி அப்பகுதி மக்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
இந்நிலையில், போராட்டக்களத்தில் வருகை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரிடம் போராட்டக்காரர்கள் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் திணைக்களம், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதோடு, வருகின்ற நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் குரல் எழுப்புவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த போராட்டத்தில், ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள், கிராம இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 5 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam