தையிட்டியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (14) காலை வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனு கையளிப்பு
இதன்போது, தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் அதனை தடுக்க நடவடிக்கை உஎடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மனு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.





புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
