கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை எதிர்த்து போராட்டம் (VIDEO)
கிண்ணியாவில் கடந்த 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு விபத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்த்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு போராட்டம் கிண்ணியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (01) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 23ஆம் திகதி கிண்ணியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதுடன், கையடக்கத் தொலைபேசியும் களவாடப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இதுவரை எதுவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தாக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமையினையும் கண்டித்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஜனநாயகத்தின் தூண்களை நெருங்காதே, குண்டர்கள் சுதந்திரமாக பொலிஸார் நித்திரையா?, கிண்ணியா பொலிஸே அமைதி காப்பது ஏன்?, ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?, ஊடக சுதந்திரத்தில் கை வைக்காதே
போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.





திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam