அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (18.10.2024) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் புதிதாக ஆய்வுக்கூடத்தில் இரத்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குறித்த பரிசோதகரை தெல்லிப்பழைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வாக்குகள் தமிழ் தேசிய தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும்: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை
மாற்றீடாக எவரும் நியமிக்கப்படவில்லை
குறித்த வெற்றிடத்திற்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது.
இதனால், இரத்த மாதிரிகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது நோயாளர்கள் பணம் கொடுத்து வேறு இடங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் டெங்கு பரிசோதனை, மலேரியா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாற்றப்படும் பரிசோதனைகளுக்கு மாற்றீடாக எவரும் நியமிக்கப்படவில்லை.
எனவே, இதற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வைத்தியசாலையில் கடமையில் உள்ள வைத்தியர்களுக்கு எதிராக களவு, ஊழல் மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிதறுண்டு சின்னங்களுக்காக அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வட்டாரங்கள்: ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |