அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த போராட்டம் தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தினால் (NRPM) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு குறித்த கூட்டுப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக NRPM அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,“மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தபால் நிலையங்கள், ரயில்வே, வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற திட்டத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.
இந்த முன்னோடியில்லாத விற்பனையானது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
