நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக மீண்டும் போராட்டம்(Photos)
நுவரெலியாவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட பழமையான தபால் நிலையத்தை கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இன்று (30.11.2023) நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் தாய் - தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! வீட்டிற்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி (Video)
சம்பள அதிகரிப்பு
நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா விடுதி நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கமைவாக தபால் நிலையத்திற்கு முன்பாக திரண்ட நுவரெலியா தபால் ஊழியர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது எதிர் வருகின்ற 2024ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் இருபதாயிரம் ரூபா சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரியும், வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு, மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தமது பிரச்சினைக்கான தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தி பாரிய போராட்டங்களை மேற்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
துவாரகா விடயத்தில் புலம் பெயர் மூன்று அமைப்புகளும் மௌனம்! குழப்பத்தில் மக்கள்: பகிரங்க குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |