யாழ். போதனா வைத்தியசாலையில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் தாய் - தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! வீட்டிற்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி (Video)
திருடப்பட்ட தொலைபேசிகள்
தொலைபேசி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் திருடப்பட்ட தொலைபேசியினை வாங்கிய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும், வைத்தியசாலையில் கடந்த மூன்று நாட்களுக்குள் திருடப்பட்ட பெறுமதியான தொலைபேசிகளையும் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மைய யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொலைபேசிகளை யாராவது தொலைத்திருந்தால் அவர்களை நேரடியாக வந்து உரிய ஆவணங்களை, ஆதாரங்களை காட்டி திருடப்பட்ட தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என குற்றத்தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |