பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
பண்டிகைக் காலத்தில், பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொலிஸாருக்கு மேலதிகமாக, புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் (11.04.2023) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திருட்டு சம்பவங்கள்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, புத்தாண்டு சந்தைக்குப் போலியான வர்த்தகர்கள் நுழைவதாகவும் பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன், போலி நாணயத்தாள்களும் புழக்கத்தில் விடப்படுகின்றன. அதுகுறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.

கவனம்
அதேநேரம், திட்டமிட்டவாறு திருட்டுச் சம்பவங்களின் ஈடுபடும் குழுவினரின் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பெறுமதியான ஆபரணங்களை அணிந்துசெல்ல வேண்டாம்.
அத்துடன் பணப்பையைக் கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri