யாழில் மதக்கும்பலின் அட்டூழியம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை!
தனியார் பத்திரிகை ஒன்றின் தலைமையகத்துக்குள் புகுந்து குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
போதகர் ஒருவர் தலைமையிலான மதக் கும்பல் ஒன்று நேற்று மதியம் யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் உள்ள தனியார் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.
அமைச்சர் அளித்துள்ள உறுதி
இது தொடர்பாக குறித்த பத்திரிகை நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கவனத்துக்குக் கொண்டு சென்றதுடன், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.



