சிறுவர்களை போராட்டங்களுக்கு அழைத்து செல்வதை உடனடியாக தடுக்க நடவடிக்கை: ஜனாதிபதி உத்தரவு
சிறுவர்களை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12.10.2022) முற்பகல் சிறுவர் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் சிறுவன் ஒருவர் பாதிக்கப்பட்டதையடுத்து சிறுவர்களை போராட்டக்களத்திற்கு அழைத்துச் செல்வதையும் அவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்துவதை தடுக்க ஆலோசனை மேற்கொள்வதற்கும் உடனடியாக தடுக்க பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மன, தார்மீக, மத மற்றும் சமூக ரீதியாக அவர்களின் முழு வளர்ச்சியை உறுதிசெய்யவும் சுரண்டல், பாகுபாடுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் நலனை மேம்படுத்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில், குழந்தைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சிறார்களை பாலியல் ரீதியான பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பில் சட்டமொன்றின் அவசியத்தையும் தெளிவுபடுத்தி அது தொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
பெற்றோரிடமிருந்து பிரிந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் குடியேறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் சில சிறுவர்களும் அடங்குகின்றனர் எனவும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
சிறுவர் இல்லங்களில் பாதுகாப்பு

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாகவும் , சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களை இனங்கண்டு அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பான பாதுகாவலர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டிய அவசியத்தையும் இதன் மூலம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri