யாழில் வெள்ளை ஈயின் தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

Arun Vijay Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Kajinthan Jul 03, 2025 04:05 PM GMT
Report

தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம்(3) நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை கட்சியிலிருந்து நீக்குவதற்குத் தமிழரசுக் கட்சி பரிசீலனை!

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை கட்சியிலிருந்து நீக்குவதற்குத் தமிழரசுக் கட்சி பரிசீலனை!

வெள்ளை ஈயின் தாக்கம்

அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னை உற்பத்தியில் வெள்ளை ஈயானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென்னை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள்.

யாழில் வெள்ளை ஈயின் தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் | Protect Coconut Trees From Whitefly In Jaffna

வேறு மாகாணங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

இந்த வெள்ளை ஈயினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதியில் இருந்து இரண்டு வார வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த உள்ளோம்.

அந்தவகையில் சாவாகச்சேரி, உடுவில், கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற 5 பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். மேற்குறித்த 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழில் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சிறீதரன்

யாழில் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சிறீதரன்

ஆளணி பற்றாக்குறை

மேற்குறித்த ஐந்து பிரதேச செயல பிரிவுகளிலும் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கும் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்தும் திரவ கரைசலை விசிறவுள்ளோம். இதற்காக 200 விசிறும் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஒரு இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 90 மரங்களுக்கு கரைசலை விசிற முடியும். அதற்கு ஏற்ப திட்டமிட்டுள்ளோம்.

யாழில் வெள்ளை ஈயின் தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் | Protect Coconut Trees From Whitefly In Jaffna

இதனை முன்னெடுப்பதற்கு எமக்கு ஆளணி பற்றாக்குறை, உணவுப் பிரச்சினை, பணியில் ஈடுபடவுள்ளோருக்கான சம்பள கொடுப்பனவு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே இந்த பணியினை தனியாக அரசாங்கமோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களோ செய்ய முடியாது.

மக்களும் எங்களுடன் கை கோர்த்தால் மாத்திரமே இந்த பணிகளை முன்னெடுக்க முடியும். இந்த பணியில் பங்கெடுக்க விருப்புவோர் சுயாதீனமாக வந்து பிரதேசங்களை தாண்டியும் உங்களது பங்களிப்பை வழங்கலாம். அடுத்த வீட்டில் அல்லது அடுத்த பிரதேசத்தில் தானே வெள்ளை ஈயின் தாக்கம் உள்ளது, எமது பகுதியில் இல்லை தானே என்று எண்ணாதீர்கள்.

அது உங்களது பகுதியிலோ அல்லது உங்களது வீட்டிலோ உள்ள தென்னைகளையும் பாதிக்கலாம். எனவே இதனை ஒழிப்பதற்கு அனைவரும் முன் வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம்!

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US