நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குதல்! வெளியானது 21ஆவது சீர் திருத்தத்தின் உத்தேச வரைபு
சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தத்தின்படி அரசியலமைப்பு பேரவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என 21வது சீர்திருத்த உத்தேச வரைபு குறிப்பிடுகின்றது.
21ஆவது திருத்த சட்டத்தின் உத்தேச வரைபு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த வரைவில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை நீக்கும் முகமாக அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நேற்று (23) விஜயதாச ராஜபக்சவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, கட்சி தலைவர்களின் பார்வைக்காக 21 ஆம் சீர்திருத்த பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.
குறித்த உத்தேச வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளவையாவன,
21 ஆம் சீர்திருத்தத்தின் படி அரசியலமைப்பு பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். குறித்த பேரவையில் பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அரச தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், இலங்கை தொழில் வல்லுநர் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஏற்கனவே பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு புறம்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மை விருப்பத்தை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.
21 ஆம் சீர்திருத்தத்தின் முழுமையான உத்தேச வரைபு கீழே
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri