அம்புலுவாவ நிலச்சரிவுகள் குறித்து ஆராய விசேட குழு
அம்புலுவாவ சுற்றுச்சூழல் மண்டலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் குறித்து எழுந்த கவலைகளைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையில் நிபுணர் குழுவை நியமிக்க ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவுகள் குறித்து அறிக்கை அளித்து வரும் ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்தன உட்பட இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழு அண்மையில் சுற்றுச்சூழல் அமைச்சரைச் சந்தித்து இந்த நிலைமை குறித்து விவாவித்துள்ளது.
நிபுணர்கள் குழுவின் கோரிக்கை
இந்த கூட்டத்தின் போது, “உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலத்திற்குள் முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை ஆராய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க முன்மொழியப்பட்டது.

இதேவேளை, நிலச்சரிவுகள் தொடர்பான ஊடக அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப விசாரணை முடிவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, அம்புலுவாவ மலை தொடர்பான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan