கொழும்பில் காணிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பில் காணி, வீடுகள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் 2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரண மக்களின் உண்மையான வருமான மட்டத்தையும் மீறி சொத்துக்களின் விலைகள் அதிகரித்துள்ளது.
இவ்வாறு பாரியளவில் உயர்ந்து வருவது, நாட்டின் நிதிப் அமைப்பிற்கு கடுமையான ஆபத்தாக அமையக்கூடும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டுமானத் துறை
மத்திய வங்கியின் 2026ஆம் ஆண்டின் நிதி ஸ்திரத்தன்மை மறுஆய்வு அறிக்கைக்கமைய, இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைக்காக வங்கிகள் வழங்கியுள்ள கடன்களின் மொத்தத் தொகை 2 டிரில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுமான செலவுகள் அதிகரிப்பு மற்றும் சமீபகாலம் வரை நிலவிய குறைந்த வட்டி வீதங்கள் காரணமாக காணி மற்றும் வீடுகளை வாங்குவதற்கு பெருமளவிலான மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கண்டயறிப்பட்டுள்ளன.
எனினும், தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் சந்தையின் விலைகள் ஒரு குடும்பத்தின் உண்மையான வாங்கும் திறனை விட மிகவும் எட்டாத உயரத்திற்குச் சென்றுள்ளதாக நிதி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
2026ஆம் ஆண்டு ஜுன் மாத நிலவரத்திற்கமைய, இலங்கை வங்கி அமைப்பினால் வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 13.7 சதவீதம் ரியல் எஸ்டேட் துறையையே சார்ந்துள்ளது.
இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கடன்கள் வீடுகள் கொள்முதல், கட்டுமானம் மற்றும் குடியிருப்பு திட்டங்களுக்காகவே வழங்கப்பட்டுள்ளன.
காணிகளின் சந்தை மதிப்பு
2026ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, வணிக வங்கிகளின் கடன் வட்டி வீதங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வங்கி கடன்கள் மூலம் வீடுகள் அல்லது காணிகளை வாங்கிய நுகர்வோரும், பிரம்மாண்டமான திட்டங்களைச் செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களும் மாதாந்திர தவணைகளை செலுத்த முடியாமல் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
சொத்து விலைகள் அதிகரிக்கும் போது தங்களிடம் அதிக செல்வம் இருப்பதாக மக்கள் உணர்ந்தாலும், சந்தையில் சொத்து விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.
அடமானம் வைக்கப்பட்ட காணிகள் அல்லது வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பை விட அதிகமான தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டிய அபாயம் உருவாகும் என குறிப்பிடப்படுகின்றது.