முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள் தொடர்பில் உடனடி விசாரணை
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய நபர்களைின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிடப்படும் எனவும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வசந்த சமரசிங்க கூரியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தீர்க்கமான விசாரணை
“இந்த வாகனங்கள் தொடர்பாக நாம் தீர்க்கமான விசாரணைகளை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். யார் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தது என்ற விபரங்களை நாம் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்துவோம்.
அரச அதிகாரிகள் இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், இவர்களுக்குத்தான் இந்த வாகனங்களை யாருடையது, யார் பயன்படுத்தியது என்ற அனைத்து விடயங்களும் தெரியும். ஏன், இவர்கள் இந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு ஒழிந்து செல்ல வேண்டும்?
அதாவது, உரிமையில்லாதவற்றை பயன்படுத்தினால்தான் பயப்பட்டு, ஒழிந்துச் செல்ல வேண்டும். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்களை வெளியாட்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஜனாதிபதி செயலக அதிகாரி
இவைதான் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம், வாகனங்களை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்களை கோரியுள்ளோம்.

இந்த அனைத்து நபர்களுக்கு எதிராகவும் எதிர்க்காலத்தில் சட்டநடவடிக்கை மேற்கொள்வோம்.
ஜனாதிபதி இதுதொடர்பாக உறுதியாகவுள்ளார். இது மக்களுடைய வாகனங்கள். இவை மீளவும் மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri