யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளரான தனேஸ்வரி இரவீந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (29.07.2023) துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த மனித வள முகாமைத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தனேஸ்வரி இரவீந்திரனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் படி, மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தனேஸ்வரி இரவீந்திரன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri