நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆரச்சியின் வாக்குறுதி
தனது மகன் மற்றும் மருமகள் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் திலிப் வெத ஆரச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குறுதி ஒன்றினை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் தேடப்படும் மகன் மற்றும் மருமகள் இருவரையும் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடையச் செய்வதாக திலிப் வெத ஆரச்சி வாக்குறுதி அளித்துள்ளார்.
குற்ற சம்பவம்
கடந்த வாரம் தெற்கு அதிவேக வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆரச்சியின் மகனும் ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயருமான ரவிந்து வெத ஆரச்சி மற்றும் அவரின் மனைவி இருவரும் பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டி கடமைக்கு இடையூறு செய்ததாக பரபரப்புச் செய்தி ஒன்று வெளியாயிருந்தது.
அதன்பின் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் இருவரையும் தேட ஆரம்பித்ததும் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சுற்றுலா விடுதி உரிமையாளர் ஒருவரையும் நேற்று(5) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திலிப் வெத ஆரச்சியின் வாக்குறுதி
இந்நிலையில் தனது மகன் ரவிந்து மற்றும் அவரது மனைவி ஆகியோரை இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைய வைப்பதாக திலிப் வெத ஆரச்சி நேற்று(5) உறுதியளித்துள்ளார்.
அதேவேளை பொலிஸார் தன் மகன் மீது தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக இந்த பிரச்சினை எழுந்துள்ளதாகவும், தனது கணவன் தாக்கப்படுவதை கண்டு பொறுத்திருக்க முடியாமலேயே அவரது மனைவியும் பொலிஸாரை திட்டியதாகவும் திலிப் வெத ஆரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
