வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான வாக்குறுதி நிறைவேறா விட்டால் போராட்டம் வெடிக்கும்
வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி சட்டமியற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என ப்ரொடெப் தொழிற்சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர் தினம் இன்று (16.06.2024) கொண்டாடப்பட்ட நிலையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு
மேலும் தெரிவிக்கையில், “இலங்கையிலும் சரி வெளிநாட்டிலும் வீட்டு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.
பலர் வீட்டு வேலைக்கு சென்று இறந்து உள்ளனர் மலையத்திலும் இது விதிவிலக்கல்ல.
பல பெண்கள் இறந்துள்ளார்கள் இதனால் இவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் இன்று அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளது.
போராட்டம்
இது தேர்தல் காலம் என்பதால் போலி வாக்குறுதிகளை தந்து விட்டு எம்மை ஏமாற்ற நினைக்க கூடாது.
இலங்கையில் இன்று வீட்டு வேலை தொழிலில் 87 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர் அதில் அதிகமானவர்கள் எமது தொழிற்சங்கத்திலேயே இருக்கின்றனர்.
ஆகவே பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற வகையில் நாம் அமைதியாக இருந்து விட முடியாது
அரசாங்கமும் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவும் வாக்குறுதி வழங்கியதை போல் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
அவ்வாறு இல்லாத பட்சத்தில் இலங்கையில் 87 ஆயிரத்திற்கும் அதிகமான வீட்டு வேலை தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம் செய்ய வேண்டி நேரிடும்” எனவும் ப்ரொடெப் தொழிற்சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
