விவசாய காணிகள் சம்பந்தமாக ஆராய களவிஜயம் மேற்கொண்டுள்ள குழு
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளிப் பிரதேசத்தின் வடலிக்குளம் மற்றும் சல்லிமுனை விவசாயக் காணிகளில் இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனைத் தீர்த்து வைப்பதற்காகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.தௌபீக் (M.S.Thoubek), குச்சவெளி பிரதேச செயலாளர் குணநாதன் உள்ளிட்ட குழுவினர் களவிஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் அப்பகுதிகளை இன்றைய தினம் சென்று பார்வையிட்டு குறைகளை ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியிலுள்ள விவசாயச் சங்கங்களின் பிரதி நிதிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
இதில் குச்சவெளி பிரதேசசபைத் தவிசாளர் ஏ.முபாரக், பிரதேசசபை உறுப்பினர் மீஸான், முன்னால் பிரதேசசபை உறுப்பினர் ஆசிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
