நுவரெலியா - ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை நீடிப்பு
நுவரெலியா மாவட்டத்தின் நானுஓயா (Nanu Oya) குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் இன்று (16.07.2024) நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் இணைப்புக் குழுவின் தலைவர் எஸ்.பி. திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக சட்டத்தரணி லலித் யூ. கமகே, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஏராளமான உயிரிழப்புக்கள்
இதன்போது, முக்கிய விடயமாக நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியினை மீண்டும் திறந்து கனரக வாகனங்கள் செல்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கேள்வி
குறித்த வீதியில் இறுதியாக இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் அடங்கலாக 7 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், வீதியை மீண்டும் திறந்து அதில் ஏற்படும் விபத்துகளுக்கும்
உயிரிழப்புக்களுக்கும் யார் பொறுப்பு கூறுவது என்று அமைச்சர் ஜீவன்
தொண்டமான் கேட்ட கேள்விக்கு கூட்டத்தில் யாரும்
பதில் அளிக்காமல் இருந்தனர்.
எனவே, நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும், வீதியினை திறக்க யாரும் முயற்சிக்காதீர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan