தமிழர் பகுதியில் எறிகணைகள் மீட்பு
கிளிநொச்சி- முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று(14) மதியம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒருவர் தங்களது காணியில் பனங்கிழங்கு பாத்தி ஒன்றை அமைப்பதற்காக மண்ணை வெட்டிய போது வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
எறிகணைகள் மீட்பு
இதனையடுத்து, விசேட அதிரடிப்படையினரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட 40 மோட்டார் எறிக்கணைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த எறிகணைகளை அழிப்பதற்கு அதிரடி படையினர்எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு குறித்த பகுதி நீண்டகாலம் யுத்தம் நடைபெற்ற பிரதேசமாகவும் வெடி பொருட்கள் அகற்றப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்துக்காக அனுமதிக்கப்பட்ட பகுதியென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-ஜது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
